நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளது.
நாகப்பட்டனத்தில் இருந்து சென்ற 14 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றஞ்சாட்டி அம் மீனவர்களை கைது செய்தனர. அதோடு, அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் நாகை கடலோர மீனவ கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.