எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 30 பேரை தனுஸ்கோடி-தலைமன்னார் இடையே இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, பிடிபட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.