மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளரின் மகனை பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் அழகாகவுண்டன்புதூரில் இயங்கிவரும் அதியமான் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் நடராஜ். இவரது மகன் விணுலோகேஸ்வரன். வயது 33. இவருக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பள்ளி தாளாளரின் மகன் என்பதால், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடம் நடத்தி வந்துள்ளார் விணுலோகேஸ்வரன்.
இந்நிலையில், இப்பள்ளியினல் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி செல்லாமல் இரு நாட்களாக வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் விசாரித்தபோது, விணுலோகேஸ்வரன் அம் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், தகாத வார்த்தைகள் பேசியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் விசாரணை நடத்தினர். அவ் விசாரணையில், விணுலோகேஸ்வரன் மீதான குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விணுலோகேஸ்வரனை சனிக்கிழமை கைது செய்தனர்.

Comments are closed.