மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்ற அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரியராஜபாலு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிவித்த பதக்கத்தை கழுத்தில் வாங்காமல் அவமதித்து கையில் பெற்றுச் சென்றார்.
தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் ராயல் ஸ்போர்ட்ஸ் க்ளப் ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம்; ஆவாரங்குடிபட்டியில் ஆக.22 முதல் நடைபெற்று வருகின்றன.
நேற்று (ஆக.25) நடைபெற்ற போட்டியின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றிபெற்ற அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரியராஜபாலு, பதக்கம் வாங்க மேடைக்கு வந்தார். அப்போது, அவரது கழுத்தில் பதக்கத்தை அணிவிக்க அண்ணாமலை முயன்றபோது, அவரது கையை தடுத்த சூரியராஜபாலு, ‘கையில் வேண்டுமானால் கொடுங்கள். வாங்கிக் கொள்கிறேன். என் கழுத்தில் நீங்கள் பதக்கத்தை அணிவிக்க வேண்டாம்’ என சொல்லி அவமதித்து, பதக்கத்தை கையில் வாங்கிக் கொண்டார்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அண்ணாமலை கொஞ்சம் அப்செட் ஆனார். ஆனால், அதை காட்டிக்கொள்ளாமல், சூரியராஜபாலுவை நிர்ப்பந்தப்படுத்தாமல், பதக்கத்தை கையில் கொடுத்துவிட்டு, அவரை பக்கத்தில் நிற்க வைத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி வைத்தார்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும், சூரியராஜபாலுவின் இந்த அநாகரிக நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Comments are closed.