மலைப்பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

பேரணாம்பட்டு வனச் சரகத்துக்குட்பட்ட அரவட்லா மலைப் பகுதியில் சுமார் ஏழு முதல் எட்டு வயது பெண் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையினர் அரவட்லா மலைப் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள், மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்தனர். அதன் பின்னர், யானையின் எலும்புக்கூடுகளை வனத்துறையினர் தீயிட்டுக் கொளுத்தினர்.

இறந்த யானை சுமார் ஏழு முதல் எட்டு வயதுடைய பெண் யானை ஆகும். தண்ணீர் அருந்த வந்து தவறி விழுந்து யானை இறந்திருக்கக் கூடும். சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் உள்ள அதன் உடல் பாகங்களை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம் என்கின்றனர் வனத்துறையினர்.

Comments are closed.