உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்தார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்றிரவு ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நடிகர் கமல்ஹாசன் இன்று காலை டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் தகவல் இமயமலையில் ஆன்மீக சுற்றுப்பணம் செய்துவரும் நடிகர் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த ரஜினிகாந்த உடனடியாக டாக்டர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும், பூரண நலம்பெற வேண்டிக்கொள்வதாகவும் டாக்டர் ராமதாஸிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Comments are closed.