தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் புறக்கணித்தனர்.
தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தனி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 12ஆவது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்து இன்று காலை உரையாற்றினார்.
இவ்விழாவில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
அதே சமயம், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது விமரிசனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.