விருத்தாசலத்தில் ரங்கநாதன் என்ற திமுக நிர்வாகியை தாக்கிய விவகாரம் தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு, வீடு திரும்பிய சீமானின் காரை திமுக நிர்வாகி ரங்கநாதன் வழிமறித்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் திமுக நிர்வாகி ரங்கனை சரமாரியாகத் தாக்கினர். மேலும், ரங்கனை கைது செய்ய வேண்டும் எனக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இச் சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ரங்கநாதன் கொடுத்த புகரின்பேரில், சீமான் மீது விருத்தாசலம் காவல் நிலைய போலீஸார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின்பேரில், திமுக பிரமுகர் ரங்கநாதன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.