மதுரையில் இன்று மாலை நடைபெறும் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது’ என்ற தீமில் அக்கட்சியின் புதிய பாடல் வெளியிடப்படுகிறது.
த.வெ.க கொடிப்பாடலுக்கு இசையமைத்த தமன், மாநாட்டு பாடலுக்கும் இசையமைத்துள்ளார். 1967, 1977-ல் முறையே திமுக, அதிமுக ஆட்சி அமைத்தது குறித்து விஜயின் பேச்சும் பாடலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ‘ரேம்ப் வாக்’ வருவார் எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர், புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அவரைத் தொடர்;ந்து ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் இம்மாநாட்டில் பேசுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் இம்மாநாட்டில் விஜய் பேசுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் பேச்சுக்கு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Comments are closed.