போட்டித் தேர்வர்களுக்கு மாவட்ட நூலகத்தில் புதிய கட்டடம் திறப்பு!

போட்டித் தேர்வர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.

மக்களவை தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இப் புதிய கட்டடத்தை தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி.செழியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தனர்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் 125.30 சதுர மீட்டரில் புதிய கட்டடம் கட்ட மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் பிரயங்கா பங்கஜம் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர், போட்டித் தேர்வர்களுக்கு, தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முரசொலி புதிதாக வாங்கிக் கொடுத்த புத்தகங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட நூலகர் அபூர்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.