குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (ஆக.20) வேட்புமனு தாக்கல் செய்தார்.
குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.