மக்களின் நன்மதிப்பை இழந்து வெகுஜன விரோதியாக திமுக மாறி இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், ‘கரூரில் விஜய் வந்தபோது ஏன் மின்தடை ஏற்பட்டது, ஏன் அவர்கள் கேட்ட இடத்தில் அனுமதி தரவில்லை, இதற்கு முதல்வர் பதில் சொல்வாரா?’ என்றார்.
திமுக சதி, தவறு செய்தவர்களைக் காப்பாற்ற பாஜக ஒன்றும் நீதிமன்றம் அல்ல, ஒரு அரசியல் கட்சி. நீதிமன்றம் நேர்மையான தீர்ப்புகளை வழங்க வேண்டும். பாஜகவுடன் விஜய் கூட்டணி கூட்டணி சேர்கிறார் என பரப்பப்படும் தகவல் திமுகவின் சதி.
மக்களின் நன்மதிப்பை இழந்து, வெகுஜன விரோதியாக திமுக மாறி இருக்கிறது. ஏற்கெனவே பலமான கூட்டணி வைத்திருந்தாலும், அதிமுகதான் வெற்றி பெற்றது. தற்போது, தேர்தல் வந்தால் ஒரு தொகுதியில் கூட திமுகவுக்கு ‘டெபாசிட்’ கிடைக்காது என்றார் நாகேந்திரன்.

Comments are closed.