கரூர் விவகாரத்தை திசை திருப்புகிறார் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கச்சத்தீவு பிரச்சினையை எழுப்பி, கரூர் விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திசை திருப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத் தரும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார். 1974-ல் பிரதமராக இந்திரா காந்தியும் முதல்வராக கருணாநிதியும் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவாரக்கப்பட்டது. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தமான கச்சத்தீரை, இலங்கைக்கு ஒப்பந்தம் செய்து வழங்கப்பட்டது முதல்வர் ஸ்டாலினுக்கு எப்படி தெரியாமல் இருந்திருக்கும்?

இதையெல்லாம் முழுமையாத் தெரிந்த முதல்வர் ஸ்டாலின், கரூர் துயர சம்பவ விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் இப்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்ட இடத்துக்கு பதில் மாற்று இடத்தில் ஏன் வழங்கப்பட்டது? மின்சாரத்தை அணைத்து, தடியடி நடத்தியது ஏன், சம்பவம் நடந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டது எப்படி? 30 ஆம்புலன்ஸ்கள் எப்படி வந்தன போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

41 உயிர்களை பாதுகாத்திருக்க வேண்டியது முதல்வரின் கடமை. அதிலிருந்து முதல்வர் தவறிவிட்டார். சம்பவம் நடந்த பின்னர் விஜய் போயிருந்தால் பதற்றம் ஏற்பட்டிருக்கும். விஜய் உயிரை எப்படி பாதுகாத்திருக்க முடியும்? கடந்த செப்.27ல் கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த நிலையில் தற்போது அங்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார் நாகேந்திரன்.

Comments are closed.