நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

தஞ்சை மண்ணின் மைந்தரும் நாகாலாந்து ஆளுநரருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் இன்று (ஆகஸ்ட் 15) காலமானார். அவருக்கு வயது 80.

பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை 6.23 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். 1945ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி பிறந்த இவர் பாஜகவில் தமிழ்நாடு மாநில செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Comments are closed.