உலகப் பிரசித்திபெற்ற நாகூர் தர்காவின் சந்தனக்கூடு (சந்தனம் பூசும்) விழாவுக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்தார்.
அதனைத் தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் அவர் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்டார்.
மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத் தர்காவில் 469வது ஆண்டாக கந்தூரி விழா நவம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று இரவு 7.30 மணியளவில் நாகூர் யாஹுசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து புறப்பட்டது.
முன்னதாக, துஆ ஓதப்பட்டு புறப்பட்ட சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிப்பல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்ன ரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்களுடன் நாகையின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
ஊர்வலத்திற்கு முன்பாக பலர் பாரம்பரிய நடனம் ஆடியபடி சென்றனர். வழிநெடுகிலும் உள்ளுர், வெளியூர் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த திரளானோர் நின்று சந்தனக்கூடு ஊர்வலத்தை கண்டு ரசித்தனர்.
இன்று அதிகாலை ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசுவதற்காக நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது.

Comments are closed.