மது ஆலை நடத்துவோர் குறித்து கணக்கெடுக்க முடியாது: அமைச்சர் முத்துசாமி

மது ஆலைகளை யார் நடத்துகிறார்கள் என்பதை கணக்கெடுக்க முடியாது என தமிழக வீட்டுவசதி மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி,
“திமுக அளித்த வாக்குறுதியில் வெறும் 85 மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கூறுகிறார். ஆனால், தேர்தல் வாக்குறுதியில் 85 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், ஆய்வில் உள்ள திட்டங்கள் குறித்த பட்டியலை அடுத்த பேட்டியில் தருகிறேன். அதை வைத்து, அன்புமணியிடம் நேரடியாக விவாதிக்க ஏற்பாடு செய்யுங்கள்,” என்றார்.

தமிழகத்தில் மதுபான ஆலைகளை திமுகவினர் நடத்துவதாகவும், மதுக்கடைகளை மூடுவதாக கனிமொழி எம்.பி., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் கேட்கின்றனர். உண்மையில், திமுக ஆட்சியில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

அக் காலத்தில் மதுபான ஆலைகளை சிலர் நடத்த ஆரம்பித்திருக்கலாம். தற்போது யாரிடம் எல்லாம் உள்ளன என கணக்கு எடுக்க முடியாது. அது ஒரு தொழில். சட்டத்தை மீறினால் கேட்கலாம். சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதை எதுவும் செய்ய முடியாது என்றார் அமைச்சர் முத்துசாமி.

Comments are closed.