‘உதயசூரியன்’ சின்னத்தில் தொடர்ந்து போட்டி: மனிதநேய மக்கள் கட்சியின் பதிவு ரத்து!

தமிழகத்தில் தனது சுயத்தை இழந்து திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தொடர்ந்து போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனித நேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

கடந்த 3 தேர்தல்களில் தன்னுடைய சுயத்தை இழந்து திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி, தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது.


அதேபோல், ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவு, தமிமுன் அன்சாரியில் மக்கள் ஜனநாயக கடசியின் பதிவு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பதிவு, எர்ணாவூர் நாராயணின் சமத்துவ மக்கள் கட்சியின் பதிவு, என்.ஆர்.தனபாலின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இக்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.