புதுச்சேரியில் நடைபெறும் தவெக பிரசார கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒருவர் பிரதான நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றார். கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் உள்ளே வருபவர்கள் அனைவiரையும் போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட்டபோது, அவரது இடுப்பு பகுதியில் இருந்து சத்தம் கேட்டது.
அவரை சோதனையிட்ட போலீஸார் அவரது இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததைக் கண்டு அதிர்;ச்சி அடைந்தனர். அவரை தனிமைப்படுத்தி காவல்துறை அதிகாரிகள், கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் இருந்து அவரை வெளியே அழைத்து வந்தனர். அவரிடம் மூத்த காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் விசாரணை நடத்தினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது தெரிய வந்தது. மேலும், சிவகங்கை மாவட்ட கிழக்கு தவெக மாவட்டச் செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக அவர் பணியில் உள்ளார் என்பதும் தெரிய வந்தது.
டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தான் டேவிட் என்பதும், பிரபு புதுச்சேரி பொதுக் கூட்டத்துக்கு வந்ததால் அவரது பாதுகாப்புக்காக டேவிட் வந்ததும் தெரிய வந்தது.

Comments are closed.