கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு இறந்து கிடந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தூக்கிட்டு இறந்து கிடந்த நபர் பெயர் அறிவொளி ராஜன் என்பதும், அவர் தன்னை சிலர் துரத்தி வருவதாகக் கூறி செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் காவல் நிலையத்துக்குள் நுழைந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை அவர் காவல் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே. இது லாக்-அப் மரணமல்ல என்றும் காவல்நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை என்றும் காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியுள்ளார்.
காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் உறவினர்கள் கூறுவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், பணியில் கவனக் குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.