தஞ்சை மாவட்டத்தில் நவ.1 விடுமுறை

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040ஆவது சதயவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்திபெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான ஐப்பசி மாத சத்ய நட்சத்திரத்தன்று சதய விழா கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு 1040ஆம் ஆண்டு சதய திருநாள் அக்டோபர் 31ஆம் தேதி, நவம்பர் 1ஆம் தேதி ஆகிய இருநாள்கள் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, நவம்பர் 1ஆம் தேதியன்று (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.