மனிதநேயத்துக்கு மதம் எப்போதும் தடை அல்ல!

கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிறுமி, தனக்கு கை தானம் செய்தவரின் சகோதரருக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உத்தரப்பிரதேசம் அலிகாரைச் சேர்ந்த அனம்தா அஹமது என்ற 16 வயது சிறுமி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது, அறுந்து கிடந்த மின்சார கம்பி பட்டதில் பாதிக்கப்பட்டு தனது வலது கையை இழந்தார்.

கடந்த ஆண்டு மூளையில் ரத்தக்கசிவு காரணமாக இறந்த குஜராத் மாநிலம் வால்சாத் என்ற ஊரைச் சேர்ந்த ரியாத் என்ற பெண்ணின் வலது கை அவரது குடும்பத்தினரிடம் இருந்து தானமாகப் பெற்று அனம்தாவுக்கு பொருத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி, ரியாவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கார்னியா மற்றும் இடது கை ஆகியவைறும் தானமாக வழங்கப்பட்டு, எட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இந்நிலையில், கை மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற சிறுமி அனம்தா, தனக்கு உறுப்பு தானம் செய்து உதவிய குடும்பத்தினர்க்கு நன்றி தெரிவிப்பதற்காக, மும்பையிலிருந்து புறப்பட்டு குஜராத் மாநிலம் வால்சா வரை பயணம் செய்து, உறுப்பு தானம் செய்த ரியாவின் சகோதரர் சிவம் மிஸ்திரிக்கு ராக்கி கயிறு கட்டினார்.

ராக்கி கயிறு கட்டுவதற்காக தனது கைய நீட்டியபோது பதினான்கு வயது சிவம் மிஸ்திரியின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது. ரியாவின் குடும்பத்தினர் அனம்தாவை கண்ணீர் மல்க தழுவி கட்டி அணைத்தனர். அவர்கள் அனைவரின் முகங்களிலும் கண்ணீர் வழிந்தது.

Comments are closed.