காலை அமுக்கி விட்ட மாணவிகள்: தலைமை ஆசிரியை அதிரடி மாற்றம்!

மாணவிகளை தனது காலை அமுக்கி விடுமாறு செய்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள மாவேரிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி. இவர் அப்பள்ளி மாணவிகளை தனக்கு காலை பிடித்து விடுமாறு கூறியதைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகள் சிலர் அவரது அமுக்கிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான சில வினாடிகள் ஓடம் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி வைரலானது.

இதையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அப் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியை கலைவாணி மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியை கலைவாணியை அப் பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

Comments are closed.