ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் அத்தியாவசியப் பொருள்களுக்கான வரி குறைப்பு அமல்படுத்துப்பட்டதுடன், 375 பொருள்களின் விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவில் மழை பெய்யும்போது உணவு டெலிவரி செய்தால் தனியாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் தற்போது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து ஆஷிஷ் குப்தா என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதன்படி, ஸ்விக்கியில் மழை கட்டணம் ரூ.25 என்றும், அதற்கு ஜிஎஸ்டி ரூ.4.50 என்றும் மொத்தம் ரூ.20.50 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
“மழை கடவுளான இந்திரனுக்கும் வரி போட ஆரம்பித்துள்ளார்கள். இனிமேல் வெயில் அடித்தால் அதற்கு ஒரு கட்டணம், ஆக்சிஜனுக்கு ஒரு கட்டணம், மூச்சு விடுவதற்கு ஒரு கட்டணம் என்று கூட வசூலிக்க வாய்ப்புள்ளது என அவர் அப் பதிவில் கிண்டலடித்துள்ளார்.


Comments are closed.