தமிழ் மிகவும் உன்னதமான மொழி என்றும், தமிழ் மொழி மற்றும் கலாசாரம் பிற மாநில மக்களிடம் கலப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்கள் உருவான தினம் ஆளுநர் மாளிகையில் நேற்று சிறப்பிக்கப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசியதாவது:
சுதந்திரத்திற்கு பின் பல மாநிலங்கள் உருவானதன் வாயிலாக நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிற மாநிலங்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது. மாநிலங்களை கொண்டாடும்போது அவரவர் தனித்துவ கலாசாரம் கொண்டவர்கள் என்பதை உணர வேண்டும்.
பல மரங்கள் கொண்ட தோட்டம் எப்படி அழகாக இருக்குமோ, அதேபோல, பல மாநிலங்களின் தோட்டமாக இந்திய விளங்குகிறது. கலாசாரத்தில் வேறுபாடு கொண்டதாக இருந்தாலும், ஒரே சிந்தனை கொண்டவர்களாக இருப்பது அவசியம். ஆசாம், தமிழகம் இடையே நீண்ட தொடர்பு உள்ளது.
தமிழ் மிகவும் உன்னதாமான மொழி. துமிழ் மொழி, கலாசாரம் பிற மாநில மக்களிடம் கலப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆளுநர்; மாளிகை, குவஹாத்தி பல்கலைக்கழகம் இணைந்து தமிழ் டிப்ளமோ படிப்பு தொடங்கியது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே தமிழ் பாடத்திட்டம் உள்ளது. அங்கு தமிழ் கற்ற மாணவர்கள் இங்கே வந்துள்ளனர்.
தமிழ் மொழியை பிற மாநிலத்தவர் ஆர்வத்துடன் கற்பதை பார்க்கும்போது, மாநிலங்கள் இடையே ஆரோக்கியமான உரையாடல் வெளிப்படும். நாகலாந்து அழகான மாநிலம். தமிழக மக்கள் நாகலாந்து சென்று அங்குள்ள மக்களுடன் உரையாட வேண்டும் எனத் தெரிவித்தார் ஆளுநர் ரவி.

Comments are closed.