வால்பாறை அருகே இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை புகுந்து, தாக்கியதில் ஒரு சிறுமி மற்றும் அவரது பாட்டி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
வால்பாறையை அடுத்துள்ளது வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட். இங்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அசாலா என்ற 55 வயது பெண்ணைத் தாக்கியது. பின்னர், அவரது பேத்தி ஹேமாசிரி என்பவரை மிதித்துள்ளது. இச் சம்பவத்தில் அவ்விருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த பாட்டி, பேத்தி ஆகிய இருவரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வால்பாறையில் காட்டு யானை தாக்கி, பாட்டியும், அவரது பேத்தியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.