75கிலோ எடையுள்ள ‘ராட்சத கொழுக்கட்டை’ படையல்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள ‘ராட்சத கொழுக்கட்டை’ படைக்கப்பட்டது. பின்னர், அக் கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப் பிள்ளையாருக்கு 50 கிலோ பச்சரிசி, 50 கிலோ உருண்டை வெல்லம், 2 கிலோ எள், 1 கிலோ ஏலக்காய் மற்றும் சாதிக்காய், 6 கிலோ நெய், 100 தேங்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு தலா 75 கிலோ எடையில் இரண்டு கொழுக்கட்டைகள் தயார் செய்யப்பட்டு, மேலதாளங்கள் முழங்க, சிவாச்சாரியார்களால் தொட்டிலில் வைத்து கொண்டுவரப்பட்டு, பின்னர் விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது.


இவ்விழாவில், மௌனமடம் கட்டளை திருஞானசம்பந்தம் சுவாமிகள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், கொழுக்கட்டையானது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.

Comments are closed.