பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 102.
தஞ்சாவூரை அடுத்துள்ள புது காரியாபட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்துவந்த சிவசங்கு வயது மூப்பு காரணமாக இறந்தார்.
சிவசங்குவிற்கு ஏழு மகன்கள், ஒரு மகள் என மொத்தம் 8 பிள்ளைகள். இதில் சினேகன்தான் கடைசி பிள்ளை. பாடலாசிரியர் சினேகனின் தந்தை மறைவிற்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.