திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றும் திமுக ஆட்சியை வீழ்த்தும் வரை தனக்கும் தொண்டர்களுக்கும் தூக்கம் இல்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஜுலை 7 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை ‘மக்களைக் காப்போம்;;;; தமிழகத்தை மீட்போம்’ என எழுச்சி பயணம் மேற்கொண்டேன்.
கோவையில் துவங்கி திருச்சி வரை 40 நாட்கள், 28 மாவட்டங்களில்,118 சட்டசபை தொகுதிகளில், 6,728 கி.மீ., பயணம் செய்து 60 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். அனைத்து தரப்பு மக்களும் பெரும் வரவேற்பு அளித்தனர்.
திமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் அட்டூழியங்கள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், நிறுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.
திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திமுக அரசு தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தவறிவிட்டது.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை 51 மாதங்களுக்கு மேல் முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்.
பல வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சியை பிடித்த பின், கோமா நிலைக்கு திமுக அரசு சென்றுவிட்டது. தமிழகத்தை பீடித்திருக்கும் துயரத்திற்கு 2026ல் முடிவுரை எழுதுவோம்.
குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோசமான விளம்பர மாடல் ‘போட்டோ ஷ{ட்’ திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். அதிமுகவை அரயணையில் ஏற்றுவோம்.
நான் மக்களில் ஒருவன்; சாதாரண தொண்டன். முன்கள வீரனாக, என் எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை, அதிமுக தொண்டர்களுக்கும் எனக்கும் தூக்கமில்லை. அதிமுக வெல்வது உறுதி என அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Comments are closed.