பெண் மருத்துவர் வீடு உள்பட சென்னையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னையில் பெண் மருத்துவரின் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையாறு காந்தி நகர் 3ஆவது தெருவில் வசிக்கும் இந்திரா என்ற டாக்டர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, வேளச்சேரியல் அமித் பிஸ்நாத் என்ற தொழிலதிபர் வீட்டிலும், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இச் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2ஆம் தேதி சென்னையில் கே.கே.நகர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தினர்.

அதேபோன்று, பாளைங்கோட்டை தியாகராஜநகர் 3ஆவது வடக்கு தெருவைச் சேர்ந்த பிரபல தனியார் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

இச் சோதனையின்போது, ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.