தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

தேர்தலில் போட்டியிடாத, தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணையம் தமது அறிவிப்பில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளது.

அதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 121 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 44 கட்சிகளின் பதிவும், தமிழகத்தில் 42 கடசிகளின் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Comments are closed.