துரோகிகள் அகன்றனர், இப்போதுதான் நிம்மதி: இபிஎஸ்

கட்சியில் இருந்த துரோகிகள் போய்விட்டனர். இப்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள் நெரிஞ்சி முள்ளாக சிலர் இருந்தனர். அவர்களை எப்படி அகற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். அவர்களாகவே தவறு செய்துவிட்டு, தங்களை துரோகிகள் பக்கம் இணைத்துக் கொண்டு வெளியேறி விட்டனர். இனி அவர்கள் அனைவரும் நம்முடைய எதிரிகள் தான்.

இனி அவர்கள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். துரோகிகளோடு கைகோர்த்தபின், அவர்களை கட்சிக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதால் தான் கட்சியில் இருந்து நீக்கி விட்டேன். ஒருவிதத்தில் இப்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளது. மேலும் பலமான கூட்டணிக்கு வேகமாக பணிகள் நடக்கின்றன. கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

Comments are closed.