திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

பேருந்தில் பயணம் செய்யும்போது பெண்ணின் 4 பவுன் நகையைத் திருடிய திமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சிமனறத் தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்தில் பயணம் செய்தபோது அவரது 4 பவுன் நகை திருடுபோனது.

இதுகுறித்து வரலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

அவ் விசாரணையின் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பாரதியை போலீஸார் கைது செய்தனர்.


இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பஸ்களில் பிக்பாக்கெட் திருடுவது முதல் அரசு கஜானாவில் பணத்தை சூறையாடுவது வரை, திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.