மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்ட தில்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டார். முதல்வரை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் தில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி முதல்வர் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் முதல்வர் ரேகா குப்தா பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது மனு கொடுக்கும் போர்வையில் வந்து முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்த அந்த நபர் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென முதல்வரின் தலை முடியைப் பிடித்து இழுத்து, அவரது கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வரை தாக்கிய நபரை தில்லி போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வரை தாக்கிய நபர் யார், எதற்காக தாக்கினார் என்ற விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.