காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன மல்லிகார்ஜுன கார்கேவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் பெங்களுருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நள்ளிரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது, காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் இருந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவiரை தீவிர கண்காணிப்புக்கு உட்டுபடுத்தியுள்ளனர்.
நிலைமை சீராகும் வரை மருத்துவ கண்காணிப்பிலே தொடர்ந்து வைக்கப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.