நடிகைக்கு பாலியல் தொல்லை: காங்கிரஸ் எம்எல்ஏ ‘சஸ்பெண்டட்’

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் (Rahul Mamkoottathil) இன்று கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

கேரளாவின் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் ‘வாட்ஸ்ஆப்’ செயலி வாயிலாக ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும், தனியாக ஓட்டலுக்கு வருமாறு அழைத்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் மலையாள திரைப்பட நடிகை ரினி ஆன் ஜார்ஜ் (Rini Ann George) அண்மையில் குற்றஞ்சாட்டி இருந்தார்.

ஆனால், அவர் ராகுலின் பெயரை வெளிப்படையாகக் கூறவில்லை. அது ராகுல் தான் என கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, மேலும் பல பெண்கள் ராகுலுக்கு எதிராக புகார் கூறினர். இந்த அழுத்தம் காரணமாக, கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார்.

‘அவர் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்யும்வரை போராட்டம் தொடரும்’ என பாஜக., கம்யூ., கட்சிகள் அறிவித்தன. இந்நிலையில், ராகுல் மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து, இன்று அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Comments are closed.