முதல்முறை வங்கிக் கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
‘சிபில் ஸ்கோர்’ பூஜ்யம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தைக் காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக் கூடாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிகளில் தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது.
தனிநபர் கடன் தகுதியை நிர்ணயிக்கும் இம் மதிப்பெண்ணை Credit Information Bureau (India) Limited எனப்படும் இந்திய கடன் தகவல் பணியகம் வழங்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.
சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாமல் பலர் கடன் பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக முதல்முறை வங்கிக்கடன் பெற முயற்சிப்போரும் சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, முதல்முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

முதல் முறை வங்கிக்கடன் பெறுவோர்க்கு சிபில் ஸ்கோர் பூஜ்யம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக் கூடாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறியுள்ளார்.
கடன் நிறுவனங்களின் சிறப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, முதல் முறை கடன் பெறுவோர்க்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
முதல் முறை கடன் பெறுவோர்க்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களது நடத்தை பின்னணி, திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

Comments are closed.