கரூரில் செப்.27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர்க்கு மத்திய அரசு அறிவித்திருந்த ரூ2 லட்சம் அவர்களது வங்கி கணக்குகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து நடைபெற்ற சில தினங்களில், இவ்விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும் காயமடைந்தவர்களையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது மத்திய அரசு சார்பில் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த நிவாரண நிதியான ரூ.2 லட்சம் இறந்தவர்களின் குடும்பத்தினரனி; வங்கி கணக்குகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வரவு வைக்கப்பட்டுள்ளது அவர்களது செல்ஃபோனில் வந்திருந்த குறுஞ்செய்தி மூலம் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு தவெக தலைவர் விஜய் அறிவித்த தலா ரூ20 லட்சம் கடந்த வாரம் வரவு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.