விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த தேவமனோகரி என்ற 64 வயது பெண் விபத்தில் மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உறுப்புகள் தானமாக வழங்கப்பட்;டன. அதன் மூலம் 4 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்.
தேவமனோகரி டிசம்பர் 13ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் டிசம்பர் 14ஆம் தேதி சேர்க்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை மூளைச்சாவு நிலையை அடைந்தார்.
இந்நிலையில், மனைவியின் உறுப்புகளை தானமாக தர அவரது கணவர் ஆவுடையப்பன் முன்வந்தார்.
இதையடுத்து, கல்லீரல் திருச்சி அப்போலோ மருத்துவமனை, இரண்டு சிறுநீரகங்கள் முறையே திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் முருகன் ஹெல்த்கேர், கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.
டீன் அருள்சுந்தரேஷ்குமார் தலைமையில், நிலைய மருத்துவ அலுவலர்கள் சரவணன், முரளிதரன், மருத்துவமனை பணியாளர்கள் தேவமனோகரி உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

Comments are closed.