தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரபல திரைப்பட நடிகை த்ரிஷா ஆகியோரின் வீடுகள் மற்றும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ஆகியவற்றில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவ்விடங்களில் காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தீவிர சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இவ் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.