கந்து வட்டி பிரச்சினையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவரும் பேராவூரணி ஒன்றி பாஜக செயலாளர் ராஜேஸ்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பேராவூரணி ஒன்றிய பாஜக செயலாளரான மேட்டுவயலைச் சேர்ந்த ராஜேஸ்குமார் கந்துவட்டி தொழில் செய்து வந்த நிலையில், அவரிடம் ஒரத்தநாடு உட்கோட்டம் வாட்டாத்திக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் திருப்பி தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதியன்று சக்திவேல் வீட்டிற்கு சென்ற ராஜேஸ்குமார், சக்திவேலின் தம்பி பிரகதீஷ் என்பவரிடம், ‘கொடுத்த பணத்தை தரவில்லை என்றால் புல்டோசர் வைத்து வீட்டை இடித்து விடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் அவ்வருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்குமார், பிரகதீஷை அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக, பிரகதழுஷின் அப்பா துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில், வாட்டாத்திக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஸ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணப்பாளர் ராஜாராம் பரிந்துரையின்பேரில், ராஜேஸ்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். அதன்படி, ராஜேஸ்குமார் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments are closed.