கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து இடதுசாரிகளின் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் 110 வார்டுகள் உள்ள நிலையில், பாஜக கூட்டணி 50 இடங்களில் வென்றுள்ளது. இடதுசாரி கூட்டணி 29, காங்கிரஸ் கூட்டணி 19, சுயேச்சைகள் 2 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர்.
பெரும்பான்மைக்கு ஓரிடம் தேவை என்ற நிலையில், சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக நிர்வாகப் பொறுப்பேற்க உள்ளது. பாஜகவைச் சேர்ந்த மாநிலத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.ஸ்ரீலேகா மேயராக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியுடன் கடும் போட்டிக்குப் பின் பாலக்காடு நகராட்சியைத் தக்கவைத்துள்ள பாஜக, திருப்பூணித்துறை நகராட்சியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியுள்ளது.
28 கிராம ஊராட்சிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கிராம ஊராட்சிகளில் 1400க்கும் மேற்பட்ட வார்டுகளை பாஜக கைப்பற்றியிருக்கிறது.

Comments are closed.