பிகார் தேர்தல் அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்றும், நிதிஷ்குமாரைப் போல தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று முதல்வராக வருவார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிரக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். இது அனைவரின் உரிமை என்றார்.
திமுகவினர் ஏன் நடுங்குகிறார்கள் என்றும் தெரியவில்லை என்றார் சீனிவாசன்.
எஸ்ஐஆர் பணிகளால் திண்டுக்கல் தொகுதியில் 40,00-50,000 வாக்குகள் குறையும். அவை எல்லாம் போலி வாக்குகள், இறந்தவர்கள். இந்த எஸ்ஐஆரில் எல்லாம் சரி செய்யப்பட்டுவிடும். பிகார் வெற்றிக்கு காரணமே எஸ்ஐஆர் தான் என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.

Comments are closed.