முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் தமிழக காவல்துறையைச் சேர்ந்த இரண்டு காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை ஏந்தலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை, இரண்டு காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடனே செயல்படும் திமுக அரசால், பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது.

இதற்கெல்லாம், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என அண்ணாமலை அக் கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.