தீபாவளியை முன்னிட்டு தமிழக போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அரசு 25 சதவீத போனஸை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தீபாவளி பணடிகையை முன்னிட்டு போக்குவரத்துக்கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு இதுவரை போனஸ் அறிவிக்கப்படவில்லை.
இதன்மூலம் உழைக்கும் வர்க்கத்தினரின் நலனில் தங்களுக்கு அக்கறை இல்லை என்பதை திமுக அரசு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
நிகழாண்டில் போனஸின் அளவை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். மேலும் அடுத்த இரு நாள்களில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என அவ்வறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.