அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்காக, துறையூர் நகர்ப் பகுதியில் நேற்றிரவு ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் காத்திருந்தபோது அவ்வழியாக 7 மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது.
அதிமுக பிரசார கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு ஏற்படுத்துவதாக ஏற்கெனவே சர்ச்சை எழுந்த நிலையில், நேற்று மீண்டும் ஆம்புலன்ஸ் வந்ததால் அதிமுகவின் அவ் வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். வாகனத்தில் நோயாளி எவரும் இல்லாததால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், வேண்டுமென்றே கூட்டத்திற்குள் வாகனத்தை ஓட்டி வருவதாகக் கூறி, அவ் வாகனத்தின் மீது கைகளால் குத்தி, அதன் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்ததாக தகவல் வந்ததால் அவ்வழியே ஆம்புலன்ஸை கொண்டு வந்ததாக அதன் ஓட்டுநர் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்த போலீஸார் தலையிட்டு, அதிமுகவினரை விலக்கிவிட்டு, ஆம்புலன்ஸை வந்த வழியே திருப்பி அனுப்பினர்.

Comments are closed.