தனக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாததால் கடும் அதிருப்தியில் இருந்துவந்த அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தார்.
அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மைத்ரேயன், அக் கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Comments are closed.