நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக்கு வந்தனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை கூடிய நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நேற்று முதல்வரின் விளக்கத்தை தொடர்ந்து விவாதிக்கப்பட்டது.
இவ்விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் காரசார விவாதம் மேற்கொண்ட நிலையில், அமைச்சர் சிவசங்கரின் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவின் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், நாமக்கல் கிட்னி முறைகேடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்துடன் கூடிய பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று பேரவைக்கு வந்துள்ளனர்.

Comments are closed.