நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

ஐ.டி. ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுபான பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டதாகவும், கடத்தப்பட்டதாகவும், நடிகை லட்சுமி மேனன் அக்கும்பலைச் சேர்ந்தவர் என்றும் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில், ஐ.டி.ஊழியரை கடத்திய கும்பலைச் சேர்ந்த மிதுன், அனீஷ், சோனா மோல் ஆகியோரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டு இருந்தனர். இத்தகவலை அறிந்து நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய ‘ரவிகுண்டெ சுவந்தம் ரசியா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன், அதைத் தொடர்ந்து, கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.