யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!

‘யுனிசெப்’ எனப்படும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பின் இந்தியாவுக்கான தூதராக பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

யுனிசெப் எனப்படும் ஐ நா குழந்தைகள் நல நிதியம் உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

மனிதாபிமான உதவி மற்றும் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இவ்வமைப்பு பாடுபடுகிறது.
இதன் இந்தியப் பிரிவில், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், ப்ரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்கள் ஏற்கெனவே தூதர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவ் வரிசையில், யுனிசெப் இந்தியா அமைப்பின் தூதராக, தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

“குழந்தைகள் தான் நம் மிகப் பெரிய பொறுப்பு. எதிர்கால நம்பிக்கை. யுனிசெப் தூதராக இணைவதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஆரோக்கியமாக வளரவும், கற்றுக் கொள்ளவும், கனவு காணவும் ஒவ்வொரு குழந்தைக்கும் தகுதியுண்டு. இதை நனவாக்கவே, யுனிசெப் உழைத்து வருகிறது. இப் பணியில் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

 

Comments are closed.