சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்து: அசத்திய நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ அக்.1ஆம் தேதி வெளியானது. இத் திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் தனுஷ் தனது சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்து அளித்துள்ளார்.

இத் திரைப்படத்தில் நாயகியாக நித்யா மேனனும், வில்லனா அருண் விஜய்யும் நடித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து தன் கிராமத்துக்கு திரும்பும் தனுஷ், தன் தந்தையின் தொழிலான இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தும் கதையில் சில உணர்வுப்பூர்வமான தருணங்கள் இருந்ததால் இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேறபைப் பெற்று வருகிறது. இதுவரை இப்படம் ரூ.35  கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.


இந் நிலையில், இவ் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தன் குலதெய்வம் அமைந்துள்ள தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் தனுஷ் கிடா வெட்டி ஊர்க்காரர்களுக்கு இன்று விருந்து அளித்துள்ளார்.

கிடா விருந்து புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Comments are closed.